சீர்காழி, டிச.22- சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறை முகத்தில் மூடப்பட்டுள்ள சாக்கடையால் கழிவு நீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழை யாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. மாவட்டத்தி லேயே இரண்டாவது துறைமுகமாக இருந்து வரும் இந்த துறைமுகத்திலிருந்து தினந் தோறும் 350 விசைப்படகு, 300 பைபர் படகு மற்றும் 250 நாட்டுப் படகுகள் மூலம் கடலுக்கு சுமார் 5000 மீனவர்கள் தினந்தோறும் சென்று மீன்பிடித்து வருகின்றனர். துறைமுகத்தில் மீன் விற்பனைக்கூடம், மீன் ஏலக்கூடம் உள்ளிட்ட இடங்களில் உரிய வடிகால் வசதியின்றி கழிவுநீர் மற்றும் மழைநீர் ஆங்காங்கே தேங்கியிருப்பதால், சுற்றுப்புற சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கொசுக்கள் அதிக எண்ணிக்கையில் இப்பகுதியில் உற்பத்தி யாகிறது. இதனால் இப்பகுதியில் காய்ச்ச லால் சிலர் பாதிக்கப்படுகின்றனர். இங்குள்ள கழிவு நீர் வெளியேறும் வகையில் அமைக் கப்பட்டிருந்த சாக்கடை கழிவு நீர் கால்வாய் உடைந்து அடைபட்டதால், கழிவு நீர் துறை முக வளாகத்தில் உள்ள அனைத்து பகுதி களிலிருந்தும் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பழையாறு துறைமுக மேம்பாட்டு பணி நடைபெற்றது. இதில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி யும் நடைபெற்றது. தரமற்ற முறையில் கான்கி ரீட்டால் அமைக்கப்பட்ட கழிவு நீர் செல்லும் கால்வாய் உள்பகுதியிலும் வெளிப்பகுதியி லும் உடைந்துள்ளது. இதனால் வருடக் கணக் கில் அப்படியே கிடக்கிறது. கழிவு நீர் செல்லும் கால்வாயை சரி செய்ய இது வரை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. பழையாறு மீன் பிடி துறைமுக வளாகத்தில் மீன்வளத்துறை ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இருந்தும் இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பழையாறு துறை முகத்தில் பழுதடைந்துள்ள சாக்கடை கால் வாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.