நாகப்பட்டினம், அக்.12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் நகரச் செயலாளராக சு.மணி தேர்வு செய்யப்பட்டார். வியாழக்கிழமை நடைபெற்ற சி.பி.எம். நாகை நகரக் குழுக் கூட்டத்தில் சு.மணி நகரச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், நாகைத் தொழிற்சங்கக் கூட்ட மைப்பின் பொதுச் செயலாளர், கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர், ஓய்வு பெற்ற கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க மாவட்ட கெளரவத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் பணியாற்றி வருபவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகியாய், நாகை யில் பல கலை இலக்கிய இரவுகளை வெற்றிகரமாய் நடத்தி யவர்களுள் ஒருவர்.