tamilnadu

img

நாகப்பட்டினம் தோழர் மு.சண்முகராஜ் காலமானார்

நாகப்பட்டினம், ஜூலை 26- நாகப்பட்டினம், நம்பியார் நகரைச் சேர்ந்த தோழர் மு.சண்முகராஜ்(45), 25.07.2019. அன்று காலை, அவரது இல்லத்தில் காலமானார்.  பொறையார் கல்லூரியில் பி.எஸ்.சி.கணினி அறிவியல் பட்டம் பயின்று, அடிப்படையில் கணினிப் பொறி யாளராக விளங்கினார். தோழர் என்.வரதராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தபோது, சென்னை மற்றும் மதுரை தீக்கதி ருக்கு, எழுத்தாளர் கவின்மலரோடு இணைந்து, முதன் முதலில் இணை யதளம் அமைத்து கொடுத்தார். சென்னைத் தீக்கதிர் அலுவலகத்தில் தோழர் என்.வரதராஜன், தீக்கதிர் இணையதளத்தைத் துவக்கி வைத்து  சண்முகராஜ்,  கவின்மலர் ஆகியோ ரைப் பாராட்டினார். தமுஎகசவிற்கு சண்முகராஜும் கவின்மலரும் முதன்முதலில் இணைய தளம் அமைத்துக் கொடுத்தனர். இதற் காக, 2006-ல், திருவண்ணாமலையில் நடைபெற்ற த.மு.எ.க.ச. மாநில மாநாட்டில் இருவரும் பாராட்டப்பட்ட னர். சண்முகராஜும் கவின்மலரும் இணைந்து,‘மண்வெளியீடு, என்னும் பதிப்பகம் அமைத்து, அதன் மூலம், புதுகை பூபாளம் கலைக் குழு வின் “வியர்வையில் குரல்” என்னும் இசைப் பாடல்கள் தொகுப்பின் குறுந் தகடு வெளியிடப்பட்டனர். ந.காவியன் எழுதிய இதயத்தைத் தேடுகிறேன்…?..எனும் கவிதைத் தொகுப்பு வெளி யிடப்பட்டது. உலக சமூக மாமன்றத்தில், வெனி சுலாவின் அப்போதைய ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் ஆற்றிய புகழ் பெற்ற ஆங்கில உரையைத் தமிழில் மொழியாக்கம் செய்து, “நாளை என்பது மிகத் தாமதம்” என்னும் பெயரில் நூல் வெளியிட்டார். சென்னைத் தீக் கதிரிலும், புதுக்கோட்டை பாரதி புத் தகாலயத்திலும் பணியாற்றினார். ‘வளர்தொழில் கம்ப்யூட்டர்’ பத்திரி கையிலும் பணியாற்றியுள்ளார். சென்னையின் சிபிஎம் உறுப்பினராக வும் இருந்தார். உடல்நலக் குறை வால், நாகை-நம்பியார் நகரில் அவ ரது இல்லத்தில் வியாழக்கிழமை காலை இயற்கை எய்தினார். புதுகை பூபாளம் கலைக்குழுவின் இயக்குநர் கா.பிரகதீஸ்வரன், சுதந்திர குமார், சுகந்தி, பாரதி புத்தகால யத்தின் மேலாளர் சிராஜுதீன், ஊடக வியலாளர்கள் வின்செண்ட், சதீஷ், சரோஜா, ‘வானவில்’ பிரேமாரேவதி, ‘புலம்’ லோகநாதன், கபீர், நாகை சிபிஎம் நகரச் செயலாளர் எம்.பெரிய சாமி, சொ.கிருஷ்ணமூர்த்தி, என்.பாபு ராஜ், ஆதி.உதயகுமார், பி.ஏ.ஜி.சந்திர சேகரன், கவிஞர்கள் ஆவராணி ஆனந் தன், ஆ.மீ.ஜவகர், ஸ்டாலின் சரவணன் உள்ளிட்டோர் நேரில் இறுதி மரியாதை செலுத்தினர். அன்று மாலை நம்பியார் நகர் அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு, இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், தமுஎகச மாநில கெளரவத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்யண்யா, நாடக வியலாளர் பிரளயன், எழுத்தாளர் அ. குமரேசன் உள்ளிட்ட பலர் இரங்கற் செய்தி அனுப்பியுள்ளனர்.

;