tamilnadu

புலம்பெயர் தொழிலாளர்கள் நாகையிலிருந்து உ.பி.க்கு அனுப்பு வைப்பு

நாகப்பட்டினம், மே 20- உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த 82 தொழிலாளர்கள் நாகப்பட்டினம் பகுதிகளில் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் 25  முதல் கொரோனா ஊரடங்கின் காரணமாக அவர்கள் வேலை  இழந்து, நாகை வெளிப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் அனைவரும் உத்தரப்பிரதே சத்தில் உள்ள அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். எனவே, புலம் பெயர்ந்த இந்த 82 தொழிலாளர்க ளும் பேருந்துகள் மூலமாகத் தஞ்சை ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் தஞ்சையிலிருந்து தனிச் சிறப்பு ரயில் மூலமாக உத்தரப்பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்படுவர். இந்தத் தொழிலாளர்களைத் தஞ்சைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாக ரெத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;