தரங்கம்பாடி அக்25- நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம் ஊராட்சிக்குட்பட்ட குரும்பக்குடி கிராமத்தையும் நல்லாடை முக்கூட்டு பகுதியையும் இணைக்க வீர சோழன் ஆற்றின் குறுக்கே புதிய கான்கிரீட் பாலத்தை கட்டித் தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. குரும்பக்குடி கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இக்கிராமத்திற்கும் நல்லாடை முக்கூட்டு பகுதிக்கும் இடையே செல்லும் வீரசோழன் ஆற்றை கடக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த மரப் பாலம் வழியாகத் தான் அப் பகுதி மக்கள் பிற பகுதிக்கு சென்று வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆற்று நீரில் மரப் பாலம் கடுமையாக சேதம டைந்து உருகுலைந்து போய் கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதித்துள்ளனர். 1.கி.மீ தூரம் சுற்றி அரும்பாக்கம் வழியாக பிற பகுதிகளுக்கு செல்வதாக வேதனையுடன் கூறுகின்றனர். இது குறித்து திருவிளையாட்டம் ஊராட்சியின் முன்னாள் தலைவரும், மார்க்சி ஸ்ட் கட்சி வட்ட செயலாளருமான பி.சீனிவா சன் கூறும்போது, உடனடியாக அதேப்பகுதி யில் கான்கிரீட் பாலம் கட்ட உரிய நடவ டிக்கை எடுப்பதோடு, தற்காலிகமாக பொது மக்களின் நலன் கருதி மரப்பாலம் ஒன்றை மீண்டும் கட்டித் தர வேண்டுமென வலி யுறுத்தியுள்ளார்.