tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர்களுக்கு அதிகரிக்கும் மக்கள் ஆதரவு

தரங்கம்பாடி, டிச.29- நாகை மாவட்டம், குத்தாலம் ஒன்றியத்துக்குட்பட்ட மாவட்ட, ஒன்றிய வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் பதவிக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவான திங்களன்று தேர்தல் நடைபெறு கிறது. மக்களுக்கான போராட்டங் களை தினம், தினம் நடத்தி மக்க ளின் பெரும் ஆதரவோடு மார்க் சிஸ்ட் கட்சி தேர்தலில் போட்டியிடு கிறது. பண பலத்தையும், அதி காரத்தையும் நம்பி அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் களத் தில் உள்ளனர்.  இந்நிலையில் பெரம்பூர் ஊரா ட்சி குத்தாலம் ஒன்றியத்தில் உள்ள பெரம்பூர் ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட செயலாள ருமான எஸ்.துரைராஜ் போட்டியிடு கிறார். மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி கட்சியின் சார்பில் நடத் திய எழுச்சி மிக்க போராட்டத்தை மக்களை திரட்டி நடத்தியதால் 32 நாட்கள் மற்றும் குத்தா லம் அருகே யுள்ள ஆட்டூர் என்னும் கிரா மத்தில் நடவு பணிகளில் கூலித் தொழி லாளர்களுக்கு பதிலாக நடவு எந்திரத்தை நிலவுடமையாளர்கள் புகுத்திய போது கூலித் தொழிலா ளர்களை ஒன்று திரட்டி போராடிய தால் 30 நாட்களும், அரசு ஊழி யர்களின் நியாயமான போராட்டத் திற்கு ஆதரவு அளித்ததால் 17 நாட்க ளும், பெரம்பூர் காவல் நிலையம் சமூக விரோத கும்பல்களின் கூடார மாக மாறி வருவதை கண்டித்தும் போராட்டம் நடத்தியதால் பல நாட் கள் என பல முறை பொய் வழக்கு பதி யப்பட்டு திருச்சி மத்திய சிறையில டைக்கப்பட்டவர்.
குத்தாலம் 
ஏழை, எளிய மக்களின் நல னுக்காக இரவு, பகல் பாராது போராடி வருபவர். எஸ்.டி என்று சக தோழர்களால் அழைக்கப்படும் எஸ்.துரைராஜ் களத்தில் நிற்பதை அறிந்த ஆளுங்கட்சியினர் போட்டி யிட அஞ்சி அதன் கூட்டணி கட்சி யான பாஜகவுக்கு பெரம்பூரை ஒதுக்கீடு செய்துள்ளது. ஒவ்வொரு நாளும் மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு மக்களின் ஆதரவு அதிகரிப்பதால் கலக்கதில் எதிர் வேட்பாளர்கள் உள்ளனர். குத்தாலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேக்கரிமங்கலம் பகுதி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அரிவாள்,  சுத்தியல்,நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிடும் கட்சியின் நகர செய லாளர் ராமகுருவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டி மாவட்ட செய லாளரும்,சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் நாகை மாலி,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழை யக்கூடலூர் பகுதி மக்களை சந்தித்து உரையாற்றினர்.பின்னர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழைய கூடலூர் ராஜமாணிக்கம் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
தஞ்சாவூர் 
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியம் ஒலயக்குன்னம் ஊராட்சி யில், ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வை.சிதம் பரத்திற்கு ஆதரவாக தெருமுனை பிரச்சாரம் மூலம் வாக்கு சேகரிக்கப் பட்டது. கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் சி. கலாவதி உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.
திருச்சிராப்பள்ளி 
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல் லூர் ஒன்றியம் கூத்தூர் ஊராட்சி 23வது வார்டு கவுன்சிலர் பொறுப் பிற்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கண்ணகி மற்றும் மாவட்ட கவுன் சிலர் பொறுப்பிற்கு போட்டியிடும் மதிமுக வேட்பாளர் சேரன் ஆகி யோரை ஆதரித்து திமுக கூட்டணி கட்சியினர் மண்ணச்சநல்லூர் திமுக ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தலைமையில் சனிக்கிழமை இறுதிக் கட்ட பிரச்சாரம் நடைபெற்றது.  சிபிஎம் புறநகர் மாவட்டச் செய லாளர் ஜெயசீலன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் சுப்ரமணியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கனக ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் செல்லம்மாள், சக்திவேல், சுப்பிர மணி, சிஐடியு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் உள்பட கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டனர்.

;