tamilnadu

சுகாதார நிலையம் திறப்பு 

 சீர்காழி, மே 16- நாகை மாவட்டம் சீர்காழி அருகே தைக்கால் துணை சுகாதார நிலையம் துவக்கி வைக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக திருமயிலாடி கிராமத்தில் இயங்கி வந்த இந்த துணை சுகாதார நிலையம் மக்களின் நலன் கருதி தைக்கால் கிராமத்தில் உள்ள ஒரு வாடகைக் கட்ட டத்துக்கு மாற்றப்பட்டு துவக்கி வைக்கப்பட்டது. கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் துவக்கி வைத்தார். ஒன்றி யக்குழு உறுப்பினர் ராஜா, ஊராட்சி தலைவர் கனகராஜ், துணைத்தலைவர் சிவப்பிர காசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.