tamilnadu

img

கிராமங்களை சூழ்ந்த வெள்ள நீர்

தரங்கம்பாடி டிச.1- நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் கடந்த ஓரிரு நாட்களாக பெய்த தொடர் கனமழையால் பல்வேறு கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து, தேங்கி இருப்பதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள னர். திருக்கடையூர் மாரியம்மன் கோவில் கீழத்தெரு முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முழங்கால் வரை உள்ள நீரில் நடந்து சென்று வருவதால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். தில்லையாடி கிராமத்தில் அமிர்தா நகர் உள்ளிட்ட தெருக்களில் குடியிருப்பை சுற்றி நீர் சூழ்ந்திருப்பதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருப்பதாக கூறுகின்றனர். இதேப் போன்றே பல்வேறு உட் கிராமங்களில் மழைநீர் தேங்கி கிடப்பதாக வும்,வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டு கின்றனர்.   ஆயப்பாடி திருக்களாச்சேரி ஊராட்சிக் குட்பட்ட ஆயப்பாடி மெயின்ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும்  ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடங்களை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்து தேங்கி கிடக்கிறது. பள்ளி குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால் உட னடியாக இரு கட்டிடங்களை சுற்றிலும் தேங்கி யுள்ள மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.