tamilnadu

img

ஊருக்குள் வந்து செல்லாததால் பேருந்து சிறைபிடிப்பு - மறியல்

தரங்கம்பாடி, அக்.26- நாகை மாவட்டம், தில்லையாடியில் ஊருக்குள் வராத தனியார் பேருந்தை சனி யன்று கிராமமக்கள் சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரத்திலிருந்து திருக்கடையூர், தில்லையாடி, பொறையார் வழியாக காரைக்கால் வரை இயக்கப்படும் தனியார் பேருந்து கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் தில்லையாடி வழியாக செல்லா மல் தரங்கம்பாடி வழியாக இயக்கப்படு வதாகவும், தில்லையாடி இறங்க வேண்டிய பயணிகளை திருக்கடையூரிலேயே வலுக்கட்டாயமாக இறக்கி விட்டு செல்வ தாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனிடையே வெள்ளியன்று இரவு அதே பேருந்தில் வந்த பெண்கள், குழந்தை கள், முதியவர்கள் என அனைவரையும் திருக் கடையூரில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளை ஞர்கள் சனியன்று காலை தில்லையாடி வந்த பேருந்தை மறித்து சிறைபிடித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். தில்லையாடி வழியாக இயக்குவதற்கு உரிமம் பெற்று விட்டு சட்டவிதிகளை மீறி வேறு வழியாக இயக்குகின்றனர். குறிப்பாக இரவில் சிதம்பரத்தில் 8.30-க்கு புறப்படும் இப்பேருந்து திருக்கடையூரில் 10.15 க்கு வந்தடைந்து தில்லையாடி செல்லும் அதன் பிறகு வேறு பேருந்து இல்லாத நிலையில் பயணிகளை பாதியிலே இறக்கி விடுவதால் கடும் சிரமத்தை அனுபவிப்பதாக கூறுவ தோடு, ஒவ்வொரு முறையும் போராட்டம் செய்யும் போதெல்லாம் இனி இது போன்று நடக்காது என கூறி விட்டு பேருந்து நிர்வாகம் மீண்டும் அதேப் போன்றே நடப்பதாக புகார் கூறுகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்க ளிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.