tamilnadu

img

முன்னணி நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெற்ற ஏவிசி கல்லூரி மாணவிகள்  

 மயிலாடுதுறை, நவ.5- மயிலாடுதுறை மன்னன்பந்தல் அருகேயுள்ள ஏவிசி பொறி யியல் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு இந்தியாவின் முன்னணி மென்பொருள் கம்பெனியில் வேலை கிடைத்துள்ளது. ஏவிசி பொறியியல் கல்லூரியின் பிலேஸ்மெண்ட் செல் மூலம் ஒவ்வொரு மாணவர்களின் திறமை மற்றும் ஆற்றலை அறிந்து அதற்கு ஏற்ப அனைவருக்கும் சிறப்பு பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு இறுதி ஆண்டு முடித்து செல்லும் போது மாணவர்கள் தங்களின் திறனுக்கு ஏற்ப பல்வேறு சிறந்த தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று செல்கின்றனர்.  இதே போல் இந்த ஆண்டு பி.இ கம்ப்யூட்டர் சையின்ஸ் துறை சேர்ந்த மாணவிகள் ஆர்த்தி, கோகிலவாணி ஆகி யோர் இந்தியாவின் முன்னணி மென் பொருள் நிறுவன மான டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் நடத்திய இன்டர்வியூவில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெற்றள்ளனர். பணி வாய்ப்பு பெற்றுள்ள மாணவிகளை கல்லூரியின் செயலர் கே.கார்த்திகேயன், முதல்வர் முனைவர் சி.சுந்தர்ராஜ், இயக்குனர் (நிர்வாகம்) முனைவர் எம்.செந்தில்முருகன், பிலேஸ்மெண்ட் செல் ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரி யர்கள் பாராட்டினர்.