tamilnadu

img

லாட்டரி அதிபரின் 70 இடங்களில் அதிரடி சோதனை

சென்னை, ஏப்.30-வரி ஏய்ப்பு புகார் தொடர் பாக, பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாயன்று அதிரடி சோதனை நடத்தினர். பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளளார். இந்நிலையில் செவ்வா யன்று கொல்கத்தா விமானநிலையத்திற்கு வந்த அவரை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக் காக அழைத்துச் சென்றனர். வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக வருமானவரித் துறைக்கு புகார்கள் வந்தன.அந்த புகார்களின் அடிப் படையில் வருமான வரித் துறை அதிகாரிகள் முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்டனர். இதில் அந்த நிறுவனங் கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான சில ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படு கிறது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் அவருக்குசொந்தமான வீடு, அலு வலகம் என 70 இடங்களில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை மேற் கொண்டனர்.சென்னையில் 10 இடங் களிலும், கோவையில் 22, கொல்கத்தாவில் 18, மும்பையில் 5, தில்லியில் 3 இடங்களிலும் மற்றும் ஹைதராபாத், கவுகாத்தி, சிலிகுரி, காங் டாக், ராஞ்சி, லூதியானா என்று மார்ட்டினுக்கு தொடர்புடைய இடங்களில் ஒரே நேரத்தில் 150-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை யில் ஈடுபட்டனர்.

;