tamilnadu

img

குடிநீருக்காக மஞ்சளாறு அணை திறப்பு

தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மஞ்சளாறு அணையில் இருந்து ஆற்றின் வழியாக தேவதானபட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதி வரை உள்ள20-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களுக்கு மஞ்சளார் ஆற்றில்  உறைகிணறுகள் அமைத்து கிராமமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்க்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் மஞ்சளாறு நீர்வரத்திண்றி வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில் குடிநீர் தேவைக்காக மஞ்சளாறு அணையில் இருந்து  10 கனஅடி நீர்  இரண்டு தினங்களுக்கு திறக்கப்படுகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 36 அடியாகவும், நீர் இருப்பு 136.96 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. நீர்வரத்து இல்லை.

;