tamilnadu

img

தேனியில் வீடு தேடி வரும் மளிகைப்பொருட்கள்....ஓபிஎஸ் துவக்கி வைத்தார் 

தேனி
தேனியில் வீடுதேடி வரும் மளிகைப் பொருட்கள் திட்டம் துவக்க விழா வியாழனன்று மாவட்ட  ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது . தேனி நாடாளுமன்ற உறுப்பினர்  ரவீந்திரநாத்குமார்  முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  துவக்கிவைத்தார்.

இந்த விழாவில்  ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: இத்திட்டத்திற்காக 7 சிறிய ரக சரக்குவாகனங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ரூ.2 ஆயிரத்திற்கு உரிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இதில் ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 27 மளிகைப்பொருட்கள் வழங்கப்படும். இத்திட்டத்தில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஒரு பவுன், அரைபவுன், கால்பவுன் தங்கக்காசு வழங்கப்படும்.தேவைப்படுவோர் ஆட்சியர் அலுவலக சேவை மைய எண்கள் 75488 57532, 95853 50940, 94876 44135 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

 இம்மாத இறுதியில் குலுக்கல் நடைபெறும். தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், ஆண்டிபட்டி பகுதியில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். அதனைத்தொடர்ந்து தேனி, போடியில் உள்ள அம்மா உணவகத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.  நிகழ்ச்சியில் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண்தேஜஸ்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .

;