tamilnadu

img

வைகை அணையிலிருந்து ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு....

தேனி:
தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் ஒருபோக நெல்சாகுபடிக்காக புதன்கிழமை வினாடிக்கு1,130 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.வைகை அணையிலிருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பணன், வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திஆகியோர் தண்ணீர் திறந்து விட்டனர். தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன், மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், சிவகங்கை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வைகை அணையிலிருந்து மதுரை,திண்டுக்கல் மாவட்டங்களில் பாசனத்திற்காக கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் மதுரை, திண்டுக் கல், சிவகங்கை மாவட்டங்களில் ஒருபோக நெல் சாகுபடிக்காக அணையி லிருந்து வினாடிக்கு 1,130 கன அடி வீதம்தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்தத் தண்ணீர் மூலம்  திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, மதுரை மாவட்டம்  வாடிப்பட்டி, மேலூர், மதுரை வடக்கு, திருமங்கலம், சிவகங்கை மாவட்டம்  திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய பகுதிகளில் உள்ள 1 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கரில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அணையிலிருந்து 120 நாள்கள் தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் 45 நாட்கள் தொடர்ச்சியாகவும், மீதமுள்ள நாட்கள் தண்ணீர் இருப்பை பொறுத்தும் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

;