tamilnadu

தேனியில் ஒரு ரூபாய்க்கு முடிதிருத்தம்

தேனி, மார்ச் 12- தேனி பாரஸ்ட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன்(42) பிபிஏ. பட்டதாரி. இவரது மனைவிரம்யா. இருவரும் ஆண்,பெண்களுக்கான பியூட்டிபார்லர் வைத்துள்ளனர். 10-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நேற்று ஒரு ரூபாய்க்கு முடி வெட்டும் சலுகையை அறிவித்தனர். இதனால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் வந்து முடிவெட்டிச் சென்றனர். காலை 7 மணிக்கு துவங்கிய சலுகை மாலை 6 மணி வரை இருந்தது. ஆண்கள் 280 பேரும், பெண்கள் புருவத் திருத்தம் செய்ய  120பேரும் வந்திருந்தனர். ஆண்களுக்கு 10 சேர் ஒதுக்கப்பட்டு 10பேர் மாறி மாறி இப்பணியில் ஈடுபட்டனர். இதேபோல் பெண்கள் 3பேர் புருவங்களை அழகூட்டும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து உரிமையாளர் நாகேந்திரன் கூறுகையில், எனதுமனைவிக்காக முதலில் பியூட்டிபார்லர் துவங்கினேன். ஆண்களுக்கு இது போன்ற தொழில்ரீதி யாக, முறைப்படுத்தப்பட்ட, வசதி இல்லை என்ற குறைபாடு இருந்தது. எனவே ஆண்களுக்கான பார்லரை துவங்கினேன்.  தற்போது மொத்தம் 5 கிளைகள் உள்ளன. அனைத்துமே குளிரூட்டப்பட்ட பார்லர் ஆகும். ஆன்லைன் மூலமும் புக்கிங் செய்து கொள்ளலாம்.உறுப்பினர் கார்டு  வசதியும் உள்ளது. இதைப் பெறும் வாடிக்கை யாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் உண்டு.  நேர்த்தியாக, காலத்திற்கு ஏற்றாற்போல இத்தொழிலை செய்வதால் வாடிக்கையாளர்களை கவர முடிந்தது என்றார்.  20 காசுக்கு பிரியாணி, ஒரு ரூபாய்க்கு புரோட்டா என்று கடை விளம்பரங்களின் தொடர்ச்சியாக ஒரு ரூபாய்க்கு முடிதிருத்தம் என்பது தேனி பகுதியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

;