tamilnadu

துணைமுதல்வர் மாவட்டத்தில் முறைகேடு மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தேனி,ஆக.27- போடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் அரசு விதிமுறையை மீறி குடிநீர் இணைப்பிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . குடிநீர் இணைப்பிற்கு மக்களிடம் ரூ 3 ஆயிரம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் போடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ 8 ஆயிரம் முதல் ரூ 12 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. வசூலித்த கூடுதல் கட்டணத்தை திருப்பித் தரவேண்டும்.  அரசு உத்தரவை பின்பற்றி குடிநீர் இணைப்பிற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி போடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் எஸ்.செல்வம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கே.பாண்டியன், பி.சந்திரசேகர் ,கே.செல்வராஜ் ,தங்கபாண்டி ,இ.மூக்கையா, செல்லத்துரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;