tamilnadu

img

தெலுங்கானாவின் எதிர்க்கட்சியாகும் மஜ்லிஸ்?

ஹைதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில், காங்கிரஸ் 19 சட்டமன்றத் தொகுதிகளில் வென்றிருந்தது. எனினும், காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனதால், எம்எல்ஏ பதவியை ராஜினாமாசெய்ய வேண்டியதானது. இதனால் காங்கிரஸ் பலம் 18 ஆக குறைந்தது. 

மறுபுறத்தில், 12 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் சேர்ந்ததால், காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை, மேலும் குறைந்து 6 ஆகியிருக்கிறது.இதன்காரணமாக, தெலுங்கானா சட்டப்பேரவையின் இரண்டாவது பெரிய கட்சி என்ற இடத்தை, ‘அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேதுல் முஸ்லிமீன்’ (ஏஐஎம்ஐஎம்) கட்சி பெற்றுள்ளது. இக்கட்சிக்கு 7 எம்எல்ஏ-க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, “தெலுங்கானா மாநில எதிர்க்கட்சி அந்தஸ்தை, காங்கிரசை விட அதிக எம்எல்ஏ-க்களைக் கொண்டுள்ள மஜ்லிஸ் கட்சிக்குத் தர வேண்டும்” என்று அதன் தலைவர் அசாதுதீன் ஓவைசி சட்டப்பேரவைத் தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.