தென்காசி:
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால்பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவியில் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்கதடை உள்ளதால் குற்றால அருவிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.