tamilnadu

அடவிநயினார் அணை திறக்க விவசாயிகள் கோரிக்கை

தென்காசி, ஜூன் 20- தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாகி வருவதால் நெற் பயிர்நாத்துகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அடவிநயினார் அணை யிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள   தென்காசி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் முதல் வாரத்தில் பருவமழை பெய்ய துவங்கும் இந்தாண்டு முதலில் சாரல் மழையுடன் துவங்கிய நிலை யில் அடவிநயினார் அணை கட்டு நீர் பாசன பகுதியில் 7200 ஏக்கர் விளை நிலங்களில் கார் சாகுடி படிக்காண முதற்கட்ட பணியான நெல் நாத்து பாவு தல் கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கினர். தற்போது மாவட்டதின் பல பகுதி யில் கடும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் வெகு வாக குறைந்த நிலையில் நெல் நாத்துகள் கருகும் நிலை உள்ளது எனவே அரசு உடனடியாக அணையை திறக்க வேண்டு மெனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.