tamilnadu

பீடி தொழிலாளர்  புதிய கிளை துவக்கம்

 தென்காசி ,ஆக. 20- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா, அடைகலப்பட்டணம் அருகில் உள்ள அழகாபுரியில் பீடித்தொழிலாளர் சங்க (சிஐடியு)  புதிய கிளை அமைப்பு கூட்டம்  நடை பெற்றது. கூட்டத்திற்கு   ஆர்.மேகலா தலைமை தாங்கி னார். கூட்டத்தில் பீடி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் எம்.வேல்முருகன்,ஆலங் குளம்  தாலுகாசெயலாளர்.மகாவிஷ்னு, தாலுகா தலைவர் பிஎஸ். மாரியப்பன் ,ஆலங்குளம் சிபிஎம் தாலுகா செயலாளர்  குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பீடி  தொழிலாளர் களுக்கு கொரோனா காலத்தில் செய்யது பீடி கம்பெனி நிர்வாகம்  சம்பள பணத்தை வாரா வாரம்  நேரடியாக தொழிலாளர்கள் கையில் வழங்கவேண்டும், . 1-4-2020 முதல் பீடி தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் பஞ்சபடி உயர்வு 1000 பீடிக்கு ரூ 10. 62 பைசா அரியர்ஸ்வுடன் வழங்கிட வேண்டும்  போன்ற பல்வேறு தீர்மானங்கள்  நிறை  வேற்றப்பட்டன.   புதிய நிர்வாகிகளாக தலைவராக மேகலா,  செயலாளர்  கலா,  பொருளாளர் காளியம்மாள் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.