நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சியில் மாதர் சங்கத்தின் புதிய கிளை துவக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள், தங்களை மாதர் சங்கத்தில் இணைத்துக் கொண்டனர். சங்க ஒன்றிய செயலாளர் கஸ்தூரி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.சுபாதேவி, விதொச ஒன்றியச் செயலாளர் பாரதி, வி.ச. ஒன்றியக் குழு உறுப்பினர் பி.எம்.மார்க்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை செயலாளர் சத்யா நன்றி கூறினார்.