தென்காசி, ஆக.17- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் யூனியன் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி எழுத்துப்பூர்வமாக உறுதி கொடுத்ததால் உடன்பாடு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் தி.கணபதி, குத்தாவிங்கம், ஞானப்பிரகாசம், சந்திரசேகரன், ராஜசேகரன், மேரி, மகாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.