tamilnadu

img

திருப்பெரும்புதூர் அருகே குடும்பத்துடன் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருப்பெரும்புதூர், ஏப்.28-திருப்பெரும்புதூர் அருகே மண்ணுர் கார் தொழிற்சாலையி லிருந்து இயந்திரங்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து குடும்பத் துடன் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே மண்ணூரில் கார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் சோவேல் இந்தியா என்ற தொழிற்சாலை உள்ளது. இதில் நிரந்தர மற்றும் தற்காலிகம் என 400-க்கும் மேற்பட்டதொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்திற்கு ரோபோ இயந்திரங்களை ஹவாசிங் என்ற நிறுவனம் வழங்கியுள்ளது. அந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய பல கோடி தொகை ரூபாயை சோவேல் நிர்வாகம் வழங்க வில்லை. மேலும், ஜிஎஸ்டி-யும் பல கோடிக்கு பாக்கி வைத்திருக்கிறது. இந்த தொகையை பல முறை கேட்டும் எந்த பதிலும் இல்லை. இதனால் ஹவாசிங் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தின் அனுமதியோடு, சோவேல் ஆலையிலுள்ள இயந்திரங்களை எடுக்க வாகனங்களுடன் தொழிற்சாலைக்கு ஞாயிறன்று வந்தனர். இந்த நடவடிக்கைக்கு சிஐடியு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன், செயலாளர் இ.முத்துக்குமார் ஆகியோர் தலையிட்டு இரு நிறுவனத்திற்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இயந்திரங்களை எடுத்து செல்லக் கூடாது என வலியுறுத்தினர். இதற்கிடையே, தொழிலாளர்கள் குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து,  இரண்டாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தற்காலிகமாக இயந்திரங்களை எடுப்ப தில்லை என்றும், அது வரைக்கும் தொழிலாளர்கள் உற்பத்தியில் ஈடுபடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும், கதவடைப்பை சட்ட ரீதியாக எதிர் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

;