tamilnadu

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு...

குறிப்பாக, குமரெட்டியாபுரம் மக்கள், 100-வதுநாளான 2018 மே மாதம் 22-ம் தேதி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடிய மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 15 பேர் உயிரிழந்ததுடன், 150-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள். இதன்பின்னரே, மே மாதம் 28 ஆம் தேதி தமிழக அரசு அந்த ஆலையைநிரந்தரமாக மூடுவதற்கான தடை உத்தரவை பிறப்பித்து ஆலைக்கு சீல் வைத்தது. இந்த தடைஉத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்திலும், பசுமை தீர்ப்பாயத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகளை தொடுத்திருந்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து ஆலை செயல்படுவதற்கான தடை தொடரும் என தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வரையில் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமென்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையையும் உயர்நீதிமன்றம் நிராகரித்துள் ளது.

பல்லாண்டுகளாக போராடி வந்த தூத்துக்குடி பகுதி மக்களின் நியாயமான உணர்வுகளை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையினால் தூத்துக்குடி பகுதி சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்பதையும், சுற்றுச்சூழலை பாழ்படுத்தும் தொழில்வளர்ச்சி  பாதகமானது என்பதையும் உயர்நீதிமன்ற தீர்ப்பு தெளிவு படுத்தியுள்ளது என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.வேதாந்தா நிறுவனத்தின் மனுவை நிராகரிக்க வேண்டுமென  பசுமைத்தீர்ப்பாயத்திலும், உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வழக்கறிஞர் மூலம் வாதங்கள் முன்வைக்கப்பட்டன என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

இத்தீர்ப்பு காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் பலியான 15 தியாகிகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிற தீர்ப்பு என்பதையும், அவர்களது தியாகம் வீண் போகவில்லை என்பதையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலைநிர்வாகத்தை எதிர்த்து எண்ணற்ற வலி, வேதனைகளோடு போராட்டங்கள் நடத்திய அனைத்துப்பகுதி மக்களுக்கும், நீதிமன்றத்தில் வழக்காடிய வழக்கறிஞர்களுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. 
இவ்வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், ஷாஜி செல்லன், இ.சுப்புமுத்து ராமலிங்கம், சீனிவாசராகவன், பர்வீன் பானு, வாமணன், கிஷோர், மோகன் காந்தி ஆகியோருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.வேதாந்தா நிறுவனம் இத்தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ள நிலையில்,  உச்சநீதிமன்றத்திலும் உரிய நியாயத்தை பெற அழுத்தமான வாதங்களை எடுத்துவைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசையும் வற்புறுத்தி கேட்டுக் கொள்வதோடு, இந்த ஆலையை தூத்துக்குடி மண்ணிலிருந்து அப்புறப்படுத்தும் வரை ஒன்றுபட்ட போராட்டத்தை அனைவரும் முன்னெடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேண்டுகிறோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;