முன்னாள் இராணுவத்தினர் விழா
தூத்துக்குடி, ஆக.11-ஞாயிறன்று காலை 10 மணிக்கு தூத்துக்குடி தன்பாடு உப்பு வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் தூத்துக் குடி மாவட்ட முன்னாள் இராணுவத்தினரின் 55வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் . அருண் பாலகோபாலன், தலைமை விருந்தின ராக கலந்து கொண்டு முன்னாள் இராணுவத்தினரை வாழ்த்தியும், பாராட்டியும் சிறப்புரையாற்றினார். பின் முன்னாள் இராணுவத்தினரின் குழந்தைகளில் 10வது, 11வது மற்றும் 12வது வகுப்புகளில் 2018-2019ம் ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவி யருக்கு பரிசு வழங்கினார். மேலும் முன்னாள் இராணுவத்தினரில் 75 வயது நிரம்பிய மூத்த குடிமக்களை பொன்னாடை போர்த்தி கவு ரவித்தார். முன்னாள் இராணுவத்தினர், அவர்களது குழந்தைகள் மற்றும் காவல்துறை செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சத்திய நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சூழல் மேம்பாட்டு முகாம்
தூத்துக்குடி, ஆக.11-தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் சமூக மேம்பாட்டு திட்டம் சார்பில் ஆண்டுதோறும் ஒரு கிரா மத்தை தத்தெடுத்து அங்கு மகளிர் மற்றும் மாண வர்களுக்கான மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு தருவைகுளம் கிராமத்தில் உள்ள பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான சூழல் மேம்பாட்டு முகாம், தருவைகுளம் புனித கத்தரீன் பெண்கள் தொடக்கப் பள்ளியில் சனியன்று நடந்தது. கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ் தலைமை வகித்தார். தூய மரியன்னை கல்லூரி யின் குழந்தை தெரஸ் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கனி மொழி பேசினார். அதனைத் தொடர்ந்து, அங்கு மகளிர் மற்றும் மாண வர்களுக்காக நடத்தப்படும் பயிற்சிகளான சணல் கை வினைப் பொருள்கள் தயாரித்தல், தையல் பயிற்சி, ஆங்கில மொழி பயிற்சி, மாடி தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட வற்றை அவர் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் பேரவை உறுப்பினர் எம்.சி. சண்முகையா, முன்னாள் ஊராட்சித் தலைவர் மகா ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பட்டதாரி பெண் தற்கொலை
நாகர்கோவில், ஆக.11-கன்னியாகுமரி அருகே பூவியூரைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மகள் மீனா (31). பட்டதாரியான இவர் திருமணமாகி கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை படுக்கையறை யில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து மீனாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையம் குறித்து புகார் சிங்களேயர்புரியில் அதிகாரிகள் ஆய்வு
நாகர்கோவில், ஆக.11-கன்னியாகுமரி மாவட்டம் தெங்கன்புதூர் அருகே சிங்களேயர்புரி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலை யம் செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டாரங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு நோய்களுக்கு இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான மருந்துகள் இருந்தும் அதனை நோயாளிகளுக்கு அண்மை காலமாக வழங்குவது இல்லை. மேலும் சிங்களேயர்புரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வரும் ஏழை எளிய மக்களை அரசு மருத்துவமனையில் மருந்துகள் இல்லை என கூறி, தான் நடத்தி வரும் தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று வியாபார ரீதியாக அரசு மருத்துவர் சதீஷ் செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் மக்கள் சார்பில் கடந்த மாதம் 15 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கபட்டது. அந்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் சுகா தாரத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் மாவட்ட பொது சுகாதார துணை இயக்குநர் மது சூதனன் தலை மையில் புகார் அளித்தவர்களிடம் முதற் கட்ட விசா ரணை ஞாயிறன்று நடைபெற்றது.