tamilnadu

img

கோவில்பட்டியில் அரசு பொருட்காட்சி திறப்பு விழா

தூத்துக்குடி, ஏப்.21- கோவில்பட்டியில் அரசு பொருட் காட்சி திறப்பு விழா நடந்தது.கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்தில் அரசு பொருட்காட்சிஅமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்புவிழா சனியன்று மாலையில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட எஸ்பிமுரளி ரம்பா முன்னிலை வகித்தார்.செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் சங்கர் அரசு பொருட்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.கோவில்பட்டி உதவி கோட்டாட்சியர் அமுதா, டிஎஸ்பி ஜெபராஜ், தாசில்தார் பரமசிவன், வட்டார போக்குவரத்துஅலுவலர் சந்திரசேகர், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர்பரிதா ஷெரீன், சுகாதார பணிகள் துணைஇயக்குநர் டாக்டர் போஸ்கோ ராஜா, துணை இயக்குநர்கள் சுந்தரலிங்கம், யமுனா, நகரசபை ஆணையாளர் அட்சயா, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, மாவட்ட உதவி வனபாதுகாவலர் பாலசுப்பிரமணியன், வனச்சரகர் சிவராம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிசெல்வம் உள்பட பலர்கலந்து கொண்டனர்.இந்த பொருட்காட்சியில் வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம், வனம், கால்நடை பராமரிப்பு, கைத்தறி,கூட்டுறவு, சமூக நலம், குடும்ப நலம்,காவல், செய்தி மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களைச் சார்ந்த 40 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் அந்தந்த துறைகளின் செயல்பாடுகள், திட்டங்கள், சாதனைகள் குறித்த விளக்க படங்கள்,பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுஉள்ளன. அவை குறித்து அந்தந்த துறைஅலுவலர்கள் பொதுமக்களுக்கு விளக்கி கூறினர். பொருட்காட்சி வளாகத்தில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ராட்சத ராட்டினங்கள், உணவகங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. மகளிர் சுய உதவிக்குழுவினரின் கைவினை பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து 45 நாட்கள் அரசுபொருட்காட்சி செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

;