தூத்துக்குடி, ஜூன் 21- தூத்துக்குடி தாளமுத்துநகரை சேர்ந்தவர் பத்மா(24). தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வரு கிறார். இவர் சனிக்கிழமை வேலை முடிந்து பீச் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது 2 வாலிபர்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து மத்தியபாகம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெய பிரகாஷ் வழக்குப்பதிந்து கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த ராஜா(19), சுந்தரவேல்புரத்தை சேர்ந்த முத்து கருப்பசாமி ஆகியோரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.