tamilnadu

img

கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி விகிதம் சரிவு!

கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி விகிதம் சரிந்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை தரவுகளில் தெரியவந்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய பங்கு தொழில் துறை இருந்து வருகிறது. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியைப் பொருத்து தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணிக்க முடியும். இந்நிலையில், மார்ச் மாதத்தின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் 0.10 சதவீதம் சரிந்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை, தரவுகளை நேற்று வெளியிட்டுள்ளது. 

தொழில் துறையின் ஒரு அங்கமான சுரங்கத் துறையின் உற்பத்தியானது, கடந்த மார்ச் மாதத்தில் சுமார் 0.8 சதவிகிதம் வளர்ச்சி மட்டுமே இருந்தது. இதுவே கடந்த பிப்ரவரி மாதத்தில் சுமார் 2 சதவிகித வளர்ச்சி அடைந்திருந்தது.

மின்சார துறையானது கடந்த மார்ச் மாதத்தில் 2.2 சதவிகித வளர்ச்சி மட்டுமே அடைந்ததுள்ளது. இதுவே கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் 5.9 சதவிகிதமாக இருந்தது. மூலதனப் பொருட்களின் உற்பத்தி வளர்ச்சியில் 8.7 சதவிகிதம் சரிவுப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என புள்ளியியல் துறை தெரிவிக்கிறது.

மேலும், தொழில்துறையின் மற்றொரு முக்கிய அங்கமான உற்பத்தி துறையின் வளர்ச்சியானது 0.4 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளது. உற்பத்தி துறையின் வளர்ச்சி விகிதம் 3 ஆண்டுகளில் குறைந்த அளவான 3.6 சதவிகிதத்தை எட்டியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 4.4 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


;