tamilnadu

img

ஆன்லைனில் வருமானவரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை சரிவு!

கடந்த 2018-19 நிதியாண்டில் இந்தியாவில், ஆன்லைனில் வருமானவரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 6.6 லட்சத்துக்கு அதிகமாக குறைந்துள்ளது.

வருமான வரித் துறையின் இ-ஃபைல்லிங் வலைத்தளத்தின் புள்ளி விவரங்களின்படி, கடந்த 2018-19 நிதியாண்டில் இந்தியாவில் 6.68 கோடி பேர், ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இதுவே கடந்த 2017-18 நிதியாண்டில் 6.74 கோடி பேரும், கடந்த 2016-17 நிதியாண்டில் 5.28 கோடி பேரும் ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதியின், கோடக் பொருளாதார ஆய்வு அறிக்கையில், ”கடந்த 2018-19 நிதியாண்டில், ஆன்லைன் வருமான வரி தாக்கல் குறைந்து இருப்பது எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2018-19 நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்தவர்கள் 79 சதவீதமாக இருந்தது. 2017-18-ல் 91.6 சதவீதமாக இருந்தது. ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையிலாக தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 1.05 கோடியாக அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு வரி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதால் வரும் ஆண்டு முதல் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை மட்டுமில்லாமல் நேரடி வரி வசூலும் குறையும் என்று கூறப்படுகிறது.

;