tamilnadu

img

அசாம் வெள்ள பாதிப்பு : முதலில் உதவியது சீனா

கவுகாத்தி, ஜூலை 27- அசாம் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது சீனா தான் முதலில் செயற்கைக் கோள் புகைப்படங்களைத் தந்து உதவியதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியாவுக்கான சீனத் தூதர் சன்வெய்டாங், வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘’இஸ்ரோவின் கோரிக்கையை ஏற்று சர்வதேச பேரிடர் உதவியாக, வெள்ள பாதிப்புகள் குறித்த  விபரங்களை சீனா அளித்து உதவி யுள்ளது. வெள்ள நிவாரணப் பணிகளில் இது உதவியாக இருக்கும். அப்பகுதிகள் விரைவில் மீளும் என்று நம்புகிறேன்,’’ என்று கூறியுள்ளார். இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறுகை யில், ‘’ பல்வேறு நாடுகளும் செயற்கைக் கோள்களை ஏவினாலும், இயற்கைச் சீற்றத்தின் போது எந்த இடத்தில் அதிக பாதிப்பு, எங்கு அதிக உதவி தேவைப்படு கிறது என்பதை அறிய அந்தந்த குறிப்பிட்ட இடத்துக்கு மேல் இருக்கும் செயற்கைக் கோள்களே புகைப்படம் எடுக்க முடியும். இதனை பல்வேறு நாடுகளும் நட்பு மற்றும் நல்லெண்ண அடிப்படையில் பகிர்ந்து கொள்கின்றன. அசாமில் ஜூலை  17ஆம் தேதி வெள்ளம் ஏற்பட்டபோது இஸ்ரோவின் கோரிக்கையை ஏற்று சீனாதான் முதன் முதலில் தனது கேவோ பென் 2 செயற்கைக் கோள் பதிவு செய்த அசாமின் வெள்ள பாதிப்பு புகைப்பட ங்களை இந்தியாவுக்கு அனுப்பியது. இந்தியாவின், கார்டோ சாட் 1 செயற்கைக் கோள் 18ஆம் தேதியே அவ்வழியே கடந்ததால் அது மறுநாளே புகைப்படம் அனுப்பியது. சீனா மட்டு மின்றி கொரியா, கனடா, ஐரோப்பிய நாடு கள் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் செயற்கைக்கோள் புகைப்படங்களை அனுப்பியுள்ளன,’’ என்று தெரிவித்துள்ள னர்.