tamilnadu

சங்கரய்யா நூற்றாண்டு - சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா.... திருவாரூரில் முதற்கட்டமாக 103 தீக்கதிர் சந்தா வழங்கினர்...

திருத்துறைப்பூண்டி:
சிபிஎம் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா நூற்றாண்டில் தீக்கதிர் நாளிதழின் வளர்ச்சியில் பெரும் அக்கறையோடு தோழர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த உற்சாகத்தோடு திருத்துறைப் பூண்டியில் புதன்கிழமையன்று (செப்-1) நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா குறித்த கருத்தரங்கில் 103 தீக்கதிர்ஆண்டுசந்தாக்கள் வழங்கப் பட்டன.

கருத்தரங்கம்
திருத்துறைப்பூண்டியில் தியாகி சிவராமன் நினைவகத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையேற்றார். மாநில செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் ஆசிரியருமான மதுக்கூர் இராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், இடைக்கமிட்டிகள் சார்பில் வழங்கப்பட்ட 103 ஆண்டு சந்தாக்களை வழங்கி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.ஜோதிபாசு, கே.தமிழ்மணி, கே.ஜி.ரகுராமன், திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் டி.வி.கார்ல்மார்க்ஸ், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கு.வேதரெத்தினம் மற்றும் மாவட்டக்குழு உறுப் பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர். முத்துப்பேட்டை செல்லையன் இயக்கப் பாடல் களை பாடினார். கருத்தரங்கில் பேசிய மதுக்கூர் ராமலிங்கம் 1947-ல் இந்தியாவிடுதலை பெற்றது 1949ஆம்ஆண்டில் சீனா விடுதலைபெற்றது. இந்தியா ஒரு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியது, ஆனால் சீனா பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட ஐந்து ஏகாதிபத்திய நாடுகளை எதிர்த்து போராடியது. போதைப்பழக்கத்திற்கு ஆட்பட்டிருந்த மக்களை “அபினி யுத்தம்”  நடத்தி மீட்டெடுத்து உலகின் மிகப்பெரிய வல்லரசாக உருவாக்கியது. 70 லட்சம் உறுப்பினர்களை கொண்ட உலகின் மிகப்பெரிய கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கொரோனா வைரசை வீழ்த்தி மிகப்பெரிய விழாவாக தனது நூற்றாண்டு விழாவை நடத்திக் காட்டியுள்ளது. இது எப்படி சாத்தியமானது.சீனாவை பற்றி அவதூறு பரப்புவதையே பலர் வேலையாக கொண்டுள்ள சூழ்நிலையில் உலகின் முதல் நாடாக கொரோனாவைரஸ் தடுப்பூசியை கண்டுபிடித்து 99 சதவீத மக்களுக்கு அதாவது 200 கோடி தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தியுள்ளது. சீன ஜனாதிபதி சோசலிசமே எங்கள் பாதை, மாவோவே எங்கள் வழிகாட்டி என்று கூறியுள்ளார். 

பொதுச் சொத்துக்களை விற்கும் மோடி அரசு
இந்தியாவை பொறுத்தவரை நரேந்திரமோடி அரசு 6 இலட்சம் கோடி சொத்துக்களை விற்பதற்கு துடிக்கிறது. அதனை தடுப்பதற்கு தேசபக்த உணர்வோடு இடதுசாரிக் கட்சிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிட்டுகள் என்றாலேமக்களுக்காக போராடக்கூடிய வர்கள்தான். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மோடி அரசுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை மக்களிடம் கொண்டுசேர்ப்பது, அனைவரையும் ஈடுபடுத்தி மக்கள்நீதிமன்றங்கள் அமைப்பது என்றபுதிய வடிவங்களில் போராட்ட ங்களை நடத்தியிருக்கிறது. தற்போது கட்சியின் கிளை மாநாடுகள் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. அந்த உற்சாகம் குறையாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்ப்பதில் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார். கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழுவின் சார்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

;