திருவாரூர், ஆக.8- திருவாரூர் மாவட்டத்தில் 2019 – 2020 ஆகிய ஆண்டுகளில் திருடு போனதாக பொது மக்களிடமிருந்து புகார் பெறப்பட்ட அடிப்ப டையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் முனைவர் எம்.துரை எடுத்த துரித நடவடிக்கையால் விலை உயர்ந்த 265 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமை யாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட காவல்கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வா ளர் எஸ்.ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சைபர் செல் மூலம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக 38 லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் இரண்டு கட்டமாக உரிமை யாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சனிக்கி ழமை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் உரியவர்களிடம் செல்போ ன்களை ஒப்படைத்தார்.