tamilnadu

img

துளிர் வினாடி- வினாப் போட்டி வெற்றி விவரம்

குடவாசல், நவ.9- திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆண்டு  தோறும் நடத்தி வரும் 6 முதல் 12 ஆம்  வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அறி வியல் துளிர் வினாடி வினா போட்டி ஒன்றிய அளவி லான முதல் கட்டப் போட்டி கள் வலங்கைமான் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகளின் விபரம்: 6, 7, 8 வகுப்பு பயிலும் மாண வர்களுக்கான போட்டியில் பங்கேற்ற பள்ளிகளில் அரசு உயர்நிலைப்பள்ளி, தென் குவளவேலி முதலிடம் பெற்றது. வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடம் பெற்றது. வேடம்பூர் ஊ.ஒ. நடுநிலைப்பள்ளி மூன்றாமி டம் பெற்றது.  9, 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான போட்டி களில் பங்கேற்றப் பள்ளி களில் தென்குவளவேலி அரசு உயர்நிலைப்பள்ளி முத லிடம் பெற்றது. சித்தன்வா ழூர் அரசு உயர்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பெற்றது. வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடம் பெற்றது. 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்றப் பள்ளிகளில் வலங்கைமான் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி முதலிடம், வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பெற்றது. போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ள முதல் இரண்டு அணிகள் ஒவ்வொரு பிரிவி லுன் மாவட்ட அளவில் நடை பெறும் போட்டிகளில் இடம் பெறுவார்கள். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ - மாணவி களுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது. நிகழ்விற்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலை மையாசிரியைகள் தலை மையேற்றார்கள். அறிவியல் இயக்க திருவாரூர் மாவட்டத்தின் தலைவர் தை. புகழேந்தி மாவட்டக்குழு உறுப்பினர் ஆசிரியர் முரளி ஆகியோர் மற்றும் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் பி.விஜய் வரவேற்புரையாற் றினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வலங் கைமான் ஒன்றியச் செயலா ளர் ஜெ.ஜெயராஜ் நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை ஒருங்கி ணைப்பு செய்தார். அறி வியல் இயக்கம் வலங்கை மான் ஒன்றியப் பொறுப்பா ளர் ப.பிரபாகரன் நிகழ்ச்சி யை தொகுத்து வழங்கினார்.