குடவாசல், அக்.21- திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலம் ஒன்றியத்தில் சிவன்கோ வில் தெருவில் அமைந்துள்ள நியாய விலைக்கடை முன்பாக இந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் சார்பாக கோரிக்கையை வலி யுறுத்தி திங்கள் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை முன்னி ட்டு அனைத்து மளிகை பொருட்க ளும் சிறப்பு திட்டத்தில் நியாய விலை கடையில் வழங்கிட வேண் டும். ஒரே நாளில் அனைத்து பொ ருட்களும் வழங்கிட வேண்டும். எடை குறையாமல் தரமான அரிசி யாக வழங்கிட வேண்டும். ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை அமல்படுத்த கூடாது என பல்வேறு கோரிக்கை யை வலியுறுத்தி நீடாமங்கலம் சிவன் கோவில் தெருவில் அமைந் துள்ள நியாய விலை கடை முன்பாக மாதர் சங்கத்தின் சார்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.கண்மணி தலைமை தாங்கினார். கோரிக்கை யை விளக்கி சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.சுமதி பேசி கண்டன உரையாற்றினார். ஜானகி, ராஜேஸ்வரி, விஜயராணி, ஜெய சுதா, பாப்பம்மாள், இந்திராணி, ஜெயமேரி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.