tamilnadu

தேர்தல் தோல்வி: மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்  

குடவாசல், ஜன.6- திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றி யம் மேலவிடையல்  ஊராட்சி ஒன்பதாவது வார்டு கீழ நல்லம் பூர் கிராமத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்த லில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  இதில் உஷாராணி பாஸ் கர் மற்றொரு வேட்பாளர் மஞ்சுளா கலைச்செல்வமும் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் மஞ்சுளா கலைச் செல்வன் வெற்றி பெற்றுள் ளார். தோல்வியடைந்த உஷா ராணி பாஸ்கரின் உறவினர் கள் செல்லதுரை, ராஜ் இரு வரும் மது அருந்திய நிலையில் தங்கள் தோல்வி க்கு காரணம் இவர்கள் தான்  என்ற நிலையில் ஒரு தெரு வில் சென்று தகாத வார்த்தை களால் ஜாதி பெயர்களை சொல்லி திட்டியதாக கூறப் படுகிறது.  மேலும் ஆயுதங்கள், உருட்டுக் கட்டைகள் வைத்து ஆபாச வார்த்தைகளால் சொல்லி திட்டி கொலை மிரட்டல்களும் விடுத்தன ராம். இதனால் அச்சமடைந்த அடைந்த குடியிருப்பு பகுதி மக்கள் வீட்டிற்கு வெளி யில் வராமல் இருந்தனர். இதை தொடர்ந்து வலங்கைமான் காவல்துறையில் அந்த பகுதி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினர் நாகேஸ்வரன் மற்றும் வலங் கைமான் சிபிஎம் நகர செய லாளர் சாமிநாதன் ஆகியோர் புகார் மனு அளித்தனர். மேலும் அசம்பாவித சம்ப வம் நிகழ்வதற்கு முன்பாக புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மக்கள் அச்சமின்றி இருக்க காவல்துறை உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்களின் வேண்டுகோளாகும்.

;