tamilnadu

img

நாட்டாற்றில் தண்ணீர் திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

குடவாசல், செப்.12- மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டு 25 நாட்கள் கடந்தும் நாட்டாற்றில் இதுவரை தண்ணீர் வரா ததை கண்டித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பாக புதன்கிழமை கண் டன ஆர்ப்பாட்டம் நன்னிலம் ஒன்றியம் கொல்லுமாங்குடி கடைவீதியில் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன் றிய தலைவர் எம்.ராமமூர்த்தி தலைமை தாங்கினார். பொருளாளர் எஸ்.தங்க ராசு, துணைத்தலைவர் ஐ.ஹாதி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  மேட்டூரில் தண்ணீர் திறந்து 25 நாள் கடந்தும் கல்லணையில் கடந்த 17ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் அரசின் தாமதமான குடி மராமத்து பணியின் காரணமாக நன்னி லம் ஒன்றியத்தில் அமைந்துள்ள நாட் டாற்றில் இதுவரை தண்ணீர் வரா ததை கண்டித்தும், விவசாயிகளை நட்டாற்றில் விடாமல் உடனடியாக சம்பா சாகுபடி செய்ய நாட்டாற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும், பாச னத்திற்கு செல்லும் அனைத்து வாய்க்காலில் தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் தூர்வார வேண் டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலிய பெருமாள், மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி, ஒன்றிய தலைவர் தியாகு. ரஜினிகாந்த் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்னிலம் ஒன்றியச் செயலாளர் டீ.வீரபாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.எம்.லிங்கம், டி.பி. ராஜா, வரத.வசந்தராஜன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.