குடவாசல், ஆக.10 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திலுள்ள சித்தாடி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளராக செயல்பட்டு வந்த தோழர் ஆர்.சச்சிதானந்தம் ஞாயிறன்று மாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைவு செய்தி அறிந்து கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, சித்தாடியில் உள்ள அவரது இல்லத்தில் சச்சிதானந்த த்தின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலு த்தினார். திங்களன்று இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.