திருவள்ளூர், மார்ச் 3- திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வரும் அதிகை முத்தரசி (6) என்ற சிறுமி சேதமடைந்த பள்ளி யை சீரமைக்க வேண்டும் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் எனக் கோரி மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் ஆட்சியரி டம் மனு அளித்தார். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால், சிறுமி அதிகை முத்தரசி வழக்கறிஞரான தந்தை பாஸ்கரன் வழிகாட்டுதலின் பேரில் பள்ளி சீர்கேடு தொடர் பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு ஏற்கனவே 3 முறை விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் திங்க ளன்று (மார்ச் 2) வழக்கு நீதி பதிகள் எம்எம் .சுந்தரேஷ். கிருஷ்ண ராமசாமி ஆகி யோர் முன்னிலையில் இறுதி விசாரணைக்கு வந்தது அப்போது பள்ளி சீர்கேடு தொடர்பாக மாணவி தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட நட வடிக்கைகள் குறித்து நீதிப திகள் அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். அரசு தரப்பில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டு விட்ட தாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனு சாமி மறுப்பு தெரிவித்து, பள்ளி சீரமைக்கப்பட வில்லை என்பதை ஆதா ரத்துடன் எடுத்துரைத்தார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞரை அழைத்து கண்டனம் தெரிவித்த நீதிப திகள் மாணவியின் நியாய மான கோரிக்கையை ஏற்று ஒரு வருடத்திற்குள் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும், ஆக்கிர மிக்கப்பட்ட பள்ளிக்குச் சொந்தமான நிலத்தை மீட்டு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர். இதில் ஏதேனும் குறை இருந்தால் மாணவி தரப்பில் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் நீதிபதி கள் தெரிவித்தனர்.