தனியார் கல்வி நிறுவனங்களில் வசூலிக்கும் கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கும்மிடிப்பூண்டியில் செவ்வாயன்று (ஜூன் 3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதித் தலைவர் கே.முனிரத்தினம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் டி.மதன், செயலாளர் எஸ். தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.