tamilnadu

img

திருவள்ளுவர் திருநாள் விருதுகள்: தமிழக அரசு அழைப்பு

சென்னை, ஆக.30- தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழ் அறி ஞர்களை சிறப்பிக்கும் வகையில் தை மாதம் திருவள்ளுவர் திருநாளில் வழங்கப்படும் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழ் அறிஞர்  களையும் தமிழுக்கு தொண்டாற்றுகிறவர்களையும் சிறப்பிக்  கும் வகையில் தை மாதம் திருவள்ளுவர் திருநாளில் பல  விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவம் தமிழ் வளர்ச்சி துறையின் www.tamilvalar chithurai.com என்ற வலைத்தளத்தில் இலவசமாக பதி விறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள் தன்விவர குறிப்புகளுடன் 2  புகைப்படம், தாங்கள் எழுதிய நூல்களின் பெயர் பட்டியலு டன் அந்நூல்களில் ஒருபடி வீதம் ‘தமிழ் வளர்ச்சி இயக்கு னர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம், முதல்  தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600 008’ என்ற முக வரிக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதிக்குள் அனுப்ப  வேண்டும். (தொலைபேசி எண் 044-28190412, 044-28190413, மின்னஞ்சல் முகவரி: tamilvalarchithurai@gmail.com. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.