tamilnadu

img

மலபார் புற்றுநோய் மையம் ரூ.150 கோடியில் விரிவாக்கம்... கேரள முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தார்

திருவனந்தபுரம்:
கேரளத்தில் தலசேரி மலபார் புற்றுநோய் மையத்தை முதுகலை ஆன் காலஜி அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக தரம் உயர்த்த உதவும் பல்வேறு திட்டங்களை முதல்வர் பினராயிவிஜயன் திறந்து வைத்தார்.

ரூ.11.39 கோடியில் குழந்தைகளுக் கான ஹீமாட்டாலஜி மற்றும் ஆன் காலஜி பிளாக், ரூ.9 கோடியில் அணு(நியூக்ளியர்) மருத்துவம் மற்றும் கதிரியக்கவியல் விரிவாக்கத் தொகுதி, ரூ.9.5 கோடியில் மருத்துவ ஆய்வக சேவைகள் மற்றும் மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி தொகுதி, ரூ.9.5 கோடி தலையீடு கதிரியக்கவியல் பிரிவு, ரூ.64 லட்சம்கேன்டீன் விரிவாக்க தொகுதி, ரூ.6 கோடி சி.டி. ஸ்கேனர் போன்ற நிறைவுசெய்யப்பட்ட திட்டங்களின் துவக்கம் நடைபெற்றது. மேலும், ரூ .81.69 கோடி
கதிரியக்க சிகிச்சைப் பகுதி விரிவாக்கம், புறநோயாளிகள் பகுதியைபுதுப்பித்தல் மற்றும் ரூ.32 கோடி மதிப்பீட்டில் மாணவ- மாணவியருக்கான புதிய விடுதிகள் கட்டும் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

விழாவில் முதல்வர் பேசுகையில், குழந்தைகளுக்கு புற்றுநோய் முன்னதாக கண்டறியப்பட்டால் முழுமையாக குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குணமடைந்தவர்களுக்கு பிற்காலத்தில் ஏற்படும் மனரீதியான பிரச்சனைகளுக்கு தொடர் சிகிச்சை தேவை. அதற்கான வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட் டுள்ளன. அறுவை சிகிச்சை செய்யமுடியாத நோயாளிகளுக்கு மருந்துகள்மூலம் புற்றை அகற்றும் சிகிச்சை முறைஇங்கு நடைபெறும். ஒரே நேரத்தில் 40 பேருக்கு ஹீமோ தெரபி அளிக்கும் வசதி இங்குள்ளது. கேரளத்தின் மிகஉயர் தரத்திலான புற்றுநோய் சிகிச்சை மையங்களில் ஒன்றாக மலபார் புற்றுநோய் மையம் மாறியுள்ளது என்றார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஆர்சிசியை மட்டும் நம்பியிருந்து மலபார் பகுதிநோயாளிகளுக்கு மலபார் புற்றுநோய் மையம் ஆறுதலளிப்பதாக அமைந்துள்ளது. 2008 ஆம் ஆண்டில், ஒரு மாதம்சுமார் 1,040 புதிய நோயாளிகள் எம்.சி.சி.யில் சிகிச்சை பெற வந்த நிலையில், 2019 இல் இந்த எண்ணிக்கை சுமார் 6,500 ஆகியுள்ளது. தொடர் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 77477 ஆக அதிகரித்துள்ளது. 4600 பேர்உள்நோயாளிகளாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் காலத்தில் கூட, 2020 இல், ஒவ்வொரு மாதமும் 6,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு வருகிறார்கள். குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்றுவதற் கான ஒரே ஒரு அரசு நிறுவனம் மலபார் புற்றுநோய் மையமாகும்.தற்போதைய முதல்வர் பினராயிவிஜயன், மின்துறை அமைச்சராக இருந்த போது 2000 ஆம் ஆண்டில் அவரது முன்முயற்சியால் மலபார் புற்றுநோய் மையம் தொடங்கப்பட்டது. அன்று முதல்வராக இருந்த இ.கே.நாயனார் உத்தரவின்படி இந்நிறுவனத்தை மின்சாரத் துறை அமைத்தது. பின்னர் 2008 இல் சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போதைய எல்டிஎப்அரசு, மலபார் புற்றுநோய் மையத்தில் பெரும் வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

;