tamilnadu

img

அடையாளம் தெரியாத மூதாட்டி மரணம்

 திருவண்ணாமலை, அக். 10- திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்த பயணிகள், அருகே சென்று பார்த்த போது மூதாட்டி இறந்து கிடந்தது தெரியவந்தது.  தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த திருவண்ணாமலை நகர காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மூதாட்டி மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.