tamilnadu

img

ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார கோரிக்கை

திருவண்ணாமலை, செப். 12- திருவண்ணாமலை மாவட்டம் முழுக்க முழுக்க விவசாயத் தொழில் சார்ந்த மாவட்டமாகும். வளமான நதிகள் மாவட்டத்தில் இல்லாமல் போனாலும் பர வலாக கிணற்றுப் பாசனம் முலமாகவே, சாகுபடி செய்யப்படுகிறது. அந்த  கிணறுகளுக்கு நீராத ராத்தை வழங்குவது மாவட்டத்தில் பெரும்பாலன ஏரிகளே ஆகும். பல்வேறு ஏரிகள் புணர மைக்கப்பட்டு வரும் இந்நிலையில்,  துரிஞ்சாபுரம் ஒன்றியம் சொரகொளத்தூர் மதுரா எல்லையில் உள்ள  ஆலந்தேரி (எ) ஆலந்தாங் கல் ஏரி. 13.5 ஏக்கர் பரப்ப ளவு கொண்டது. ஏரியை சுற்றி  ஆக்கிரமிப்பு உள்ளதால் குட்டைபோல் காட்சிய ளிக்கிறது.  நீர்வரத்து கால்வா யும் ஆக்கிரமிக்கப்பட்டுள் ளது.  எதிர்காலத்தில் குடி நீருக்கும், விவசாய தேவைக்  கும் மக்கள் அவதிப்படும் நிலை உருவாகும். எனவே, மாவட்ட நிர்வாகம் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு தூர் வார வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;