கொள்முதல் விலையை ஏற்றினால் பால்விலையையும் உயர்த்த வேண்டுமா? புதுச்சேரி அரசுக்கு சிபிஎம் கேள்வி
புதுச்சேரி, ஆக. 31- பால்விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பால் கொள்முதல் விலையை ஏற்றினால் கூட விற்பனை விலையை இந்த அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த மாதிரியான அத்தியாவசியமான பொருட்களை லாபத்திற்கு விற்கக் கூடாது. வியாபார நோக்கத்தில் அரசு ஈடுபடக்கூடாது. பாலுக்கு அரசு மானியம் தந்து விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமே தவிர, விலையை உயர்த்தக்கூடாது. ஒரு வியாபாரி செய்கிற வேலையை அரசு செய்கி றது. இந்த அரசு சமூக நோக்கத்தோடு செயல் படவில்லை. கொள்முதல் விலையை உயர்த்துவதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால் விற்பனை விலையை உயர்த்து வது எந்த விதத்தில் நியாயம்? புதுச்சேரி மாநிலத்தில் விவசாயம் நலிந்து விட்டது. மேய்ச்சல் நிலங்களும் வெகுவாக குறைந்துவிட்டன. பால் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியில் நகர்த்துவதற்காக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளது. துணை நிலை ஆளுநர் உரையில் 2018-19ஆம் ஆண்டில் மாநிலத்தில் 49,200 மெட்ரிக் டன் பால் உற்பத்தி செய்துள்ளதாகக் குறிப் பிடப்பட்டுள்ளது. இது வெளிமாநிலத்தி லிருந்து கூடுதல் விலை கொடுத்து வாங்கும் பாளையும் உள்ளடக்கியதாகும். சொந்த மாநில பால் உற்பத்தியாளர்களுக்கு பால் உற்பத்தி விலையாக ரூபாய் 26 மட்டும் கொடுத்துவிட்டு, அண்டை மாநிலத்திலிருந்து போக்குவரத்து செலவு உட்பட ரூ. 36க்கு கொள்முதல் செய்கிறோம். இது அப்பட்ட மான உழைப்பு சுரண்டலாகும்.இதனால்தான் புதுச்சேரியில் பால் உற்பத்தி தொடர்ந்து சரிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ரூ.4 மட்டுமே கொள்முதல் விலையை உயர்த்தி இருப்பதும் ரூ. 6 நுகர்வோர்களுக்கு உயர்த்தி இருப்பதும் இருதரப்பை வஞ்சிக்கும் செயலாகும். எனவே பான்லே நிறுவனத்தை முறைப்படுத்தினாலே பால் விலையை உயர்த்த வேண்டிய தேவை இருக்காது. ஏழை-எளிய மக்களின், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்களின் தலையில் சுமையை ஏற்றாமல் புதுச்சேரி அரசு உடனடியாக இந்த பால் விலை ஏற்றத்தைத் திரும்பப் பெறுவதோடு பால் உற்பத்தியாளர்களுக்குத் தேவையான ஒரு லிட்டர் பால் ரூ 40க்கு கொள்முதல் செய்வதோடு, மானிய விலையில், தீவனம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
கலசபாக்கம் அருகே விவசாயிகள் சாலை மறியல்
திருவண்ணாமலை, ஆக. 31- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே, பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சீரமைக்க கோரி கிராம விவசாயிகள் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். கலசபாக்கம் அடுத்த கட லாடி மாம்பாக்கம் கிரா மத்தில் உள்ள டிரான்ஸ்பார் மர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது. இத னால் விவசாய நிலங்க ளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. பொதுமக்க ளுக்கு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. தற்போது, நெல் நடவு பணிகள் நடைபெற்று வருகிறது. நெல் நடவுக்காக விவசாயிகள் நாற்றங்கால் அமைத்துள்ளனர். எனவே உடனடியாக பழுதடைந்த டிரான்ஸ்பார் மரை சீரமைக்கக்கோரி, மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் புகார் அளித்தும், இதுவரை டிரான்ஸ்பார்மர் சீரமைக் கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள், விவசாயிகள் செங் கம் - போளூர் சாலையில் மறி யலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த கடந்த கடலாடி காவல் துறையினர், பொதுமக்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். மின் வாரிய அதிகாரி களை தொடர்பு கொண்டு, விரைவில் டிரான்ஸ்பர் சீர மைக்க நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.