தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.சுப்ரமணியன் ஓய்வு பெறும் நாளில், வேண்டுமென்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து ஓய்வு பெற அனுமதிக்கக் கோரி, ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் பெரணமல்லூர் சேகரன் உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.