tamilnadu

img

திண்ணை இலக்கிய நிகழ்வு 124

வந்தவாசி,ஜன.12- தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில்  திண்ணை-124 நிகழ்வு எழுத்தாளர் செஞ்சி தமிழினியன் எழுதிய ‘பானையின் செங்கோல்,  ஊராகாலி’ ஆகிய நூல் விமர்சன நிகழ்வாக  நடை பெற்றது. இவ்விழாவில் பொரு ளாளர் முனைவர் மகாலட்சுமி வரவேற்றார். இராமலிங்க குழும நிறுவனர் சிவக்குமார், கவிஞர் ஆரிசன், பூங்குயில் சிவக்குமார்,கவிஞர் இயற்கை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  ‘ பானையின் செங்கோல் என்ற ஹைக்கூ கவிதை நூலினை தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் ரஜினி அறிமுகம் செய்து உரை யாற்றுகையில்,“ சமூக சிக்கல்களையும், நடை முறை யதார்த்தங்களையும் பேசும் கவிதைகளை மேற்கோள் காட்டினார்”. ஊரகாலி சிறுகதை தொகுப்பு நூலினை அறி முகம் செய்து பேசிய தமுஎ கச மாநிலக் குழு உறுப்பின ரும் எழுத்தாளருமான மணிநாத்,“ தான் வியந்த சிறுகதைகளில் செஞ்சி வட்டார மக்களின் கிளை மொழிக் கூறுகள், வர்க்கப் போராட்டம், சடங்கு மூட நம்பிக்கை, மண் சார்ந்த பண்பாடு போன்றவற்றை வாசகர்களோடு பகிர்ந்து கொண்டார். முன்னதாக மண்ணிசைப் பாடல்களும்,தென்னாங்கூர் அரசு கல்லூரி மாணவர்கள் கவிதை வாசித்தலும் வெகு வாகக் கவர்ந்தன. நிறைவாக கிளைத் தலைவர் ரவி நன்றி கூறினார். கிளைச் செயலாளர் பேரா. பிரபாகரன் ஒருங்கிணைத் தார். தமுஎகச மாவட்டக் குழு உறுப்பினர் சாத்தமங்கலம் அண்ணாமலை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.பி. வெங்கடேசன், கிளை நிர்வாகிகள் எட்டியப்பன், பாடகர் ரஜினி, ராதா கிருஷ்ணன் பேராசிரியர் பூபாலன், ஆசிரியர் தமிழர சன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்.

;