tamilnadu

img

சூரியகாந்தியை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை

திருவண்ணாமலை, ஜன.23- திருவண்ணாமலை மாவட்டம் தண்ட ராம்பட்டு, தானிப்பாடி பகுதிகளில் அதிக  அளவு சூரியகாந்தி பூ சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடி செய்யப்படும் சூரியகாந்தி விதையை, அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்ட ராம்பட்டு அடுத்த வீரணம் பகுதியில், பெண்  விவசாயி லட்சுமி என்பவர், கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு தானியங்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். மேலும், கடந்த 5 வருடங்களாக சூரிய காந்தி பயிரிட்டு விவசாயம் செய்து வருகி றார். சூரியகாந்தி பயிர் வைப்பதற்கு ஒரு ஏக்க ருக்கு 2 கிலோ விதைகள் வீதம் தேவைப் படுகிறது. இந்த சூரியகாந்தி விதை கிலோ 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனை வாங்கி வந்து பயிரிடும் விவசாயி லட்சுமி சுமார் 100 நாட்கள்  வரை, பாதுகாத்து அறு வடை செய்து வருகிறார்.  ஏக்கருக்கு 450  கிலோ முதல், 500 கிலோ வரை மட்டுமே சூரிய காந்தி விதை கிடைப்பதாக  தெரிவிக்கிறார். சூரியகாந்தியை வாங்க வரும்  வியா பாரிகள், கிலோ ஒன்றுக்கு, ரூ.10 அல்லது 20 முதல் விலை கொடுப்பதாக  அவர்  வேதனை தெரிவிக்கின்றார். விவசாய குடும்பத்தினர் 4 மாதம் உழைத்து சூரியகாந்தியை சாகுபடி செய்கின்றனர். வனப்பகுதி அருகே விவ சாய நிலம் இருப்பதால், இரவு நேரங்க ளில் காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்தி வருவ தாகவும்,  இதனாலும் தங்களுடைய உழைப்பு  வீணாகி வருவதாகவும் வருத்தத்துடன் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசும்,  மாவட்ட வேளாண்மை துறையும், சூரிய காந்திக்கு உரிய விலை நிர்னயம் செய்து  நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என,  கோரிக்கை விடுத்துள்ளனர்.

;