tamilnadu

img

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சியை கைப்பற்றிய திமுக

திருவண்ணாமலை, ஜன.11- திருவண்ணாமலை மாவட்டத் தில்  மாவட்ட ஊராட்சி குழு தலைவ ராக. திமுகவை சேர்ந்த பார்வதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்  தில்  2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் திங்களன்று (ஜன.6) பதவியேற்றுக்கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து பதவி யேற்றுக்கொண்டவர்கள்,  மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர்,துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், துணைத் தலை வர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் சனிக்கிழமையன்று (ஜன.11) நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக பார்வதி சீனிவாசனும், துனைத் தலைவராக பாரதியும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். திருவண்ணாமலை, போளூர், ஆரணி, கீழ்பென்னாத்தூர், செய்யாறு, பெரணமல்லூர், கலசப் பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு வெம்பாக்கம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் திமுகவை சேர்ந்த வர்கள் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்களாக  தேர்ந்தெடுக்கப்பட்ட னர். மேற்கு ஆரணி, ஜமுனாமரத்தூர், வெம்பாக்கம், வந்தவாசி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் ஒன்றியக் குழு தலைவர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். அனக்காவூர் ஊராட்சி ஒன்றி யத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு  திலகவதி வெற்றிபெற்றார். துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத் தில் உள்ள 20 உறுப்பினர்களில் அதிமுக 10, திமுக 10 என சமமாக உள்ளதால்  ஒரு தரப்பினர் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்ததால் மறு தேதி  குறிப்பிடாமல் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திலும்  ஒன்றியக்குழுத் தலைவர் தேர்வு  நடைபெற்றது. பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திலும் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்வு மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 18 ஊராட்சி ஒன்றியங்களில், குழு தலைவர்களாக,  திருவண்ணா மலை -க.கலைவாணி (திமுக),  கீழ்பென்னாத்தூர் பூ.அய்யாக் கண்ணு (திமுக), போளூர் - பெ.சாந்தி (திமுக), கலசப்பாக்கம் ரா.அன்பரசி (திமுக), சேத்துப் பட்டு- அ.ராணி (திமுக), ஆரணி- க.கனிமொழி (திமுக), பெரண மல்லூர் - இ.இந்திரா (திமுக), செய்யாறு -ஒ.ஜோதி (திமுக), தெள்ளார் - இ.கமலாட்சி (திமுக), வெம்பாக்கம்-த.ராஜீ (அதிமுக), மேற்கு ஆரணி-எஸ்.பச்சையம்மாள் (அதிமுக), ஐவ்வாதுமலை -மு.ஜீவா (அதிமுக), வந்தவாசி-ஆ.ஜெயமணி (அதிமுக), செங்கம் -விஜயராணி (இந்திய தேசிய காங்கிரஸ்), அனக்காவூர் -ஆர்.திலகவதி (சுயேட்சை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல், தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம், புதுப்பாளையம் ஆகிய ஒன்றியங்களில் தேர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத் தில் உள்ள 18 ஒன்றிய குழுவில் திமுக 9 இடங்களையும், அதிமுக 4 இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேட்சை  ஒரு இடத்தி லும் வெற்றி பெற்றன.

;