tamilnadu

img

திருவண்ணாமலை கோயிலில் முறைகேடு, ஊழல் விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை, மார்ச் 3- திருவண்ணாமலை கோயிலில் முறை கேடுகள் மற்றும் ஊழல் நடைபெறுவது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருபவர்களிடம் பல்வேறு வகை யில் முறைகேடுகளும், ஊழல்களும் நடை பெறுவதாக புகார் எழுந்தது. அந்த புகார் களை குறித்து அறநிலையத் துறை வேலூர்  இணை ஆணையர் மாரிமுத்து தலைமை யிலான அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவ்வாறு பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலை விலிருந்து வரும் மக்களிடம், பல்வேறு தொகையினை  கோயில் ஊழியர்கள் லஞ்ச மாக வசூலிப்பதாக புகார் எழுந்தது. குறிப்பாக, அண்ணாமலையார் கோயி லில் பணிபுரியும் சில உயர் அதிகாரிகள் தனி யார் உணவகங்கள், டிராவல்ஸ் முகவர்களு டன் தொடர்பு வைத்துக்கொண்டு வெளிநாடு களில் இருந்து ஒரே குழுவாக வரும் பக்தர்க ளிடம் பல லட்சம் ரூபாயை லஞ்சமாகப் பெற்று வருவதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்த புகார்கள் இந்து சமய அற நிலையத் துறை ஆணையருக்கு சென்றது. இதையடுத்து, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு, இந்து சமய அறநிலையத் துறையின் வேலூர் இணை ஆணையர் மாரி முத்துவுக்கு அறநிலையத் துறை ஆணை யர் உத்தரவிட்டார். இதையடுத்து, இணை ஆணையர் மாரி முத்து, உதவி ஆணையர் ஜான்சிராணி ஆகி யோர் தலைமையிலான குழுவினர் திங்கள் கிழமை(மார்ச் 2) காலை முதல்   இரவு 7.30  மணி வரை கோயில் ஊழியர்கள், குறிப்பாக  உள்துறையில் பணிபுரியும் ஊழியர்கள், குருக்கள், சிவாச்சாரியர்கள், பாதுகாவலர் கள் எனப் பலரிடம் விசாரணை மேற்கொண்ட னர். இந்த ஆய்வு குறித்து திருவண்ணா மலை மக்கள் கூறியபோது, திருவண்ணா மலை கோயிலில்  பல்வேறு விதமான முறை கேடுகள் மற்றும் ஊழல் நடைபெறுவது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி நட வடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

;