tamilnadu

திருவண்ணாமலை விளையாட்டு மைதானத்தில் செயற்கை இழை ஓடுதளப் பாதை

 திருவண்ணாமலை, ஆக. 16- திருவண்ணாமலை மாவட்ட விளையாட்ட ரங்கில், மத்திய-மாநில அரசு களின் நிதி உதவியுடன் ரூ.  6.69 கோடியில் அமைக்கப் பட்டுள்ள ஒளிரும் மின்  விளக்குகள், நீர்தெளிப்பான் கள், வடிகால் அமைப்பு போன்ற வசதிகளுடன் கூடிய  செயற்கை இழை ஓடு தளப்பாதையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.சு.கந்த சாமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் எல்.நான்சி, அரசு அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த செயற்கை இழை ஓடுதளப் பாதையில் 8 தடகள  ஒடுபாதை, இயற்கை புல்  தரையுடன் கூடிய கால்பந்து  மைதானம், இரவில் விளை யாட்டுப் போட்டிகள் நடை பெற ஏதுவாக உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப் பட்டுள்ளது.  விளையாட்டு மேம்பாட்டு பெண்கள் விடுதி யில் தங்கியுள்ள 121 வீராங்க னைகள் மற்றும் அருகாமை யில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும், விளையாட்டு வீரர்களும் பயன்பெறும் வகையில் இந்த அரங்கம் அமைக்கப் பட்டுள்ளது.

;